Breaking News

காமாட்சிபுரி ஆதீனம் மறைவுக்கு காஞ்சி சங்கராசாரியார் இரங்கல்

காஞ்சிபுரம், மார்ச் 12:

கோயம்புத்தூர் ஒண்டிப்புதூர் அருகேயுள்ள காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேசுவர சுவாமிகள் உடல் நலக்குறைவால் முக்தியடைந்ததையடுத்து காஞ்சி சங்கராசாரியார் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாக செவ்வாய்க்கிழமை இரங்கல் செய்து வெளியிட்டுள்ளார்.

காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேசுவர சுவாமிகள்


கோவை ஒண்டிப்புதூர் அருகே காமாட்சிபுரி ஆதீனமாக இருந்து வந்தவர் சிவலிங்கேசுவர சுவாமிகள்(55)இவர் உடல் நலக்குறைவால் முக்தியடைந்தார்.இவரது மறைவுக்கு காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்தார். 

மேலும் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் அவருக்குமோட்ச தீபம் ஏற்றவும் உத்தரவிட்டுள்ளார்.புதன்கிழமை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்படும் எனவும் காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

No comments

Thank you for your comments