மாவட்ட ஊராட்சி குழு நிதியில் அமைக்கப்பட்ட புதிய சிமெண்ட் சாலை திறப்பு.
காஞ்சிபுரம், பிப்.29-
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கோனேரி குப்பம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட மின் நகர் பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் நித்யா சுகுமார் பரிந்துரையின் பேரில் 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு திறப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் கலந்து கொண்டு புதிய சிமெண்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
புதிய சிமெண்ட் சாலை திறப்பு விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரசாத், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சசிகுமார், ஒன்றிய நிர்வாகிகள் மாரிமுத்து, இளஞ்செழியன் மாவட்ட பிரதிநிதி பி.எம்.ரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பகுதி மக்களும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments