பூங்கா, பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சி, கரைமாநகரில் ரூ.47.76 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கூடிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் பணியினையும், ஐஸ்வர்யம் நகரில் ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் பூங்காவினையும், சந்தோஷ் அவென்யூவில் ரூ. 49 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருவள்ளுவர் பூங்காவினையும், குன்றத்தூர் நகராட்சி, நத்தம் ஊராட்சியில் ரூ. 1.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினையும், நத்தம் ஊராட்சியில் ரூ.27.76 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கூடிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிடத்தையும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து குன்றத்தூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஐஸ்வர்யம் நகர் பூங்காவினையும், ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சந்தோஷ் அவென்யூ மற்றும் மகாவீர் அவென்யூ பூங்காவினையும், ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நத்தம் அங்கன்வாடி மையத்தினையும், ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் திருநாகேஸ்வரம் காலனியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினையும் ஆக மொத்தம் ரூ.96.14 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பூங்காக்கள் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்து, ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள படேல் பூங்கா மற்றும் காந்தி பூங்கா, ரூ.19.80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள திருமலை நகர் பூங்கா, ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள ஸ்ரீசாய் அவென்யூ பூங்கா,
ரூ.19.80 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள அப்துல்கலாம் பூங்கா, ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பஜார் தெரு பூங்கா, ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள குட்டி விநாயகர் நகர் பூங்கா, ரூ.19.60 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பி.கே.வி.மகா நகர் பூங்கா, ரூ.19.40 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள ஓம்சக்தி நகர் பூங்கா, ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள அருணாச்சலேஸ்வர் நகர் பூங்கா, ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள அமர்பிரகாஷ் பூங்கா, ரூ.18.00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சம்மந்தம் நகர் பூங்காவிற்கான அடிக்கல் கல்வெட்டினையும், ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் குன்றத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு கூடம் கட்டும் பணிக்கும் மற்றும் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கான அடிக்கல் கல்வெட்டினையும், ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டில் மேத்தா நகர் பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணிக்கும் ரூ.13.50 இலட்சம் மதிப்பீட்டில் குன்றத்தூர் நத்தம் பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டும் பணிக்கும் மற்றும் ரூ.15.00 இலட்சம் வார்டு எண்.18 மேத்தா நகர் பகுதியில் நியாயவிலைக் கடை கட்டிடம் கட்டும் பணிக்கான அடிக்கல் கல்வெட்டினையும், தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் (TURIP) 2024-25 கீழ் ரூ.313.00 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலைகள் அமைப்பதற்கும், தலா ரூ.150.00 இலட்சம் மதிப்பிலான 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் பஜார் தெரு மற்றும் கொல்லை தெரு ஆகிய இடங்களில் அமைப்பதற்கான அடிக்கல் கல்வெட்டினையும் ஆக மொத்தம் ரூ.880.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல் கல்வெட்டினை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், குன்றத்தூர் நகரமன்றத் தலைவர் திரு.கோ.சத்தியமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments