Breaking News

தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதல்! - கேள்விக்குறியாகும் ஊடக சுதந்திரம்... ஜனநாயக படுகொலை.. நே.ஜ.யூ. தலைவர் டாக்டர் கா.குமார் கடும் கண்டனம்

சென்னை :

போதை பொருள் கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகந்த வேதனையை அளிக்கின்றது. செய்தியாளர்கள் மீதான தாக்குதல் தொடர்கதையாக உள்ளன. இது ஜனநாயக படுகொலை செயலாகும், இதே நிலை நீடித்தால் செய்தி சுதந்திரம் பறிபோகும் நாடு அழிவுநிலைக்கு செல்லும். ஊடக சுதந்திரம் கேள்விகுறியாகின்றன. கொலைவெறித் தாக்குதல் நடத்திய குண்டர்களை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

போதை பொருள் கடத்தல்

2000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கில் தேடப்படும் முக்கிய நபரான முன்னாள் திமுக நிர்வாகியும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் வீட்டில் நேற்று இரவு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி அவரது வீட்டிற்கு சீல் வைத்து விட்டு சென்றனர். 

இந்நிலையில் நுங்கம்பாக்கம் உள்ள கொரியர் அலுவலகமான 'சகாரா எக்ஸ்பிரஸ்' என்ற அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது.

கொடூர தாக்குதல்

இதனையடுத்து இந்த சோதனையை உறுதி செய்வதற்காக தனியார் தொலைகாட்சி செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள், இங்கு எதற்காக வந்தீர்கள் என கேட்டு ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரை மிகக் கொடூரமாக தாக்கி கேமராவை பிடுங்கிக் கொண்டனர். 

அறையில் அடைப்பு

பின்னர், ஒளிப்பதிவாளர் செந்தில்குமாரை அடித்து தாக்கியதுடன் அவரை இழுத்துச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்து கொடுமை படுத்தியதுடன் கேமரா எடுத்த வீடியோ பதிவுகளை அழித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஒளிப்பதிவாளரை விடுவித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை

மேலும் இதில் காயமடைந்த செந்தில்குமாரை தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் தனியார் செய்தி சேனல் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கிடையே தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேஷ்னல் ஜர்னலிஸ்டஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,  

“தனியார் செய்தி ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குண்டர்களை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.

உரிய சட்ட பாதுகாப்பு

மேலும், குற்றச் செயல்கள்,  ஊழல்கள்  குறித்தும் மற்றும் சமூகநீதி சார்ந்த செய்திகள் குறித்து  சேகரிக்கும் செய்தித் துறையினர்களுக்கு  எவ்வித அரசியல் அச்சுறுத்தலும் அளிக்காமல், அவர்களின் கருத்து சுதந்திரத்தையும், உரிய சட்ட பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று  முதலமைச்சர் அவர்களை  கேட்டுக்கொள்கிறேன்.

ஜனநாயக படுகொலை

செய்தியாளர்களை மிரட்டுவதும், தாக்குதல் நடத்தும் இந்த செயல் சமூகத்தின் அவல நிலையையே காட்டுகின்றன. இது மிகவும் கண்டனத்துக்கு உரிய செயலாகும். ஊடக சுதந்திரம் கேள்விக்குறி யாகின்றன.  இது ஜனநாயக படுகொலையாகும்..!

மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக நேரம் காலம் பாராமால் அயராது உழைக்கும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகம், சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் செயல்பட்டால்தான் மக்களுக்கு உண்மைகள் சென்று சேரும்.  

போராடும் நிலை

அரசியல் மற்றும் மதவாத சக்திகள், பத்திரிகையாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறார்கள். அதன் விளைவு ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறை தனது சுதந்திரத்துக்காகப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு செய்தியா ளர்களை தாக்குபவர்கள் மீது உரிய வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதற்கு உரிய தீர்வு கிடைக்கும். 

மிரட்டல் - பொய் புகார்

குறிப்பாக அரசியல் பின்புலம் உள்ளவர்கள் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களை மிரட்டும் செயல் தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. செய்தியாளர்களை மிரட்டுவது, அவர்கள் மீது பொய் புகார் அளிப்பது போன்ற செயல்கள் அரங்கேறிவருகிறது.

செய்தி சுதந்திரம் பறிபோகும்

இதே நிலை நீடித்தால் செய்தி சுதந்திரம் பறிபோகும்.. நாடு அழிவுநிலைக்கு செல்லும்.. அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை நிலை உருவாகும்.

வெட்கக்கேடானது

ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகைத் துறையினருக்குப் பாதுகாப்பில்லாத சூழல் அதிகரித்து வருகிறது. தொடர் தாக்குதல், கொலை என அராஜக போக்கு தொடர்கதையாக இருப்பது.. வெட்கக்கேடாக உள்ளது. 

அரசியல் பின்புலம்

செய்தி சேகரிக்க தடையாக அரசியல் பின்புலம் செயல்பட்டால் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் செய்தியாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி  தங்களது உரிமைக்காக போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம்.  

செய்தியாளர்கள் மீது தாக்கு நடத்தினாலும், செய்தித்துறை நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தினாலும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் போராடும்.  சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல நாட்டுக்காக உழைக்கும் செய்தியாளர்கள் மிரண்டால் விளைவு...

இவ்வாறு  நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார்  வெளியிட்டுள்ள  தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments