Breaking News

காஞ்சிபுரம் கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை நிகழ்ச்சி

காஞ்சிபுரம், பிப்.29:

அரக்கோணத்திலிருந்து செயல்பட்டு வரும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் வியாழக்கிழமை கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் விதம் குறித்து ஒத்திகை நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்கள்.


காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்தார்.ஏடிஎஸ்பி எஸ்.பாலகுமார், தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் பி.பாஸ்கரன், உதவி தீயணைப்பு அலுவலர் இ.சங்கர்,பேரிடர் மேலாண்மைத்துறை வட்டாட்சியர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆர்.சுரேஷ்குமார் வரவேற்று பேசினார்.அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையின் அணித்தலைவர் பிரதீப்பாட் தலைமையிலான குழுவினர் ஒரு இடத்தில் அணுக்கதீர் வீச்சால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று அதற்கேற்ற உடை அணிந்து செயல்முறை விளக்கம் செய்து காட்டினார்கள்.

ஜோதிட ஆன்மிக தகவல்களுக்கு https://www.way2astro.in/

இதனைத் தொடர்ந்து ஒத்திகையை சிறப்பாக நடத்தியவர்களையும்,அவர்களது செயல்களையும் காஞ்சிபுரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெ.யோகஜோதி பாராட்டி பேசினார். நிறைவாக கல்லூரியின் லெப்டினன்ட் தெய்வசிகாமணி நன்றி கூறினார்.

இந்நிகழ்வில் மருத்துவர் கே.வி.பிரபு,மின்சாரத்துறை உதவிப் பொறியாளர் என்.திருநாவுக்கரசு, 108 அவசர ஊர்தி ஒருங்கிணைப்பாளர் எம்.செல்வமணி ஆகியோர் உட்பட கல்லூரி பேராசிரியர்கள்,மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



 

No comments

Thank you for your comments