அங்கம்பாக்கம் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள அங்கம்பாக்கம் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது..
71வது பிறந்தநாளை குறிப்பிடும் வகையில் அங்கம்பாக்கம் பள்ளியை சேர்ந்த 71 மாணவ-மாணவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முகமூடியை அணிந்துக்கொண்டு பிறந்ததநாள் வாழ்த்துக்களை பாடலாக பாடி தெரிவித்தனர்.
மேலும் மாணவர்கள் அனைவரும் முதலமைச்சர் உருவ கட்அவுட் பக்கத்தில் நின்று படம் எடுத்துக்கொண்டு மகிழ்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சேகர் செய்திருந்தார்.
முன்னதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதலின்படி பள்ளியில் 2024-25ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையும் இன்று துவங்கப்பட்டது. பெற்றோர்கள் சேர்க்கை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தலைமையாசிரியரிடம் கொடுத்து பிள்ளைகளை பள்ளியில் சேர்த்தனர்.
பள்ளியில் முதல் வகுப்பில் சேர வந்த குழந்தைகளை தலைமையாசிரியர் தணிகைஅரசு ஆசிரியர்கள் லதா சீனிவாசன் பொற்கொடி கீதா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர் நந்தினி பார்த்தசாரதி பிரியங்கா மஞ்சுப்பிரியா ரோஜா மாலை அணிவித்து வரவேற்றனர்.
பள்ளியில் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் எழுது பலகையும் இனிப்பும் வழங்கப்பட்டது.
No comments
Thank you for your comments