Breaking News

சென்டிரல் பேங்க் நிர்வாக இயக்குநர் காஞ்சி சங்கர மடத்தில் தரிசனம்

காஞ்சிபுரம், மார்ச் 13:

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் சுவாமிகள் அதிஷ்டானத்தில் சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.வி.ராவ் புதன்கிழமை தரிசனம் செய்தார்.

படவிளக்கம் : சென்டிரல் பேங்க் நிர்வாக இயக்குநர் எம்.வி.ராவ் அவர்களுக்கு பிரசாதம் வழங்கும் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்

சென்டிரல் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்து வருபவர் எம்.வி.ராவ்.இவர் காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகா பெரியவர் சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் தரிசனம் செய்தார்.

அவருக்கு மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,ஸ்ரீகாரியம் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி ஆகியோர் சால்வை, மற்றும் மாலைகள் அணிவித்து பிரசாதமும் வழங்கினார்கள்.

நிர்வாக இயக்குநர் எம்.வி.ராவுடன் வங்கியின் பொதுமேலாளர் அரவிந்த்குமார்,மண்டல மேலாளர் சந்தோஷ்குமார் ஸ்ரீவத்சவ் ஆகியோர் உட்பட அவ்வங்கி அதிகாரிகள் பலரும் உடன் வந்திருந்தனர்.

இந்நிகழ்வில் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ராமச்சந்திரன்,காஞ்சிபுரம் சந்திர சேகரேந்திரா பல்கலைக்கழக துணை வேந்தர் ஜி.சீனிவாசு,சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் பம்மல் விஸ்வநாதன்,ஸ்ரீமடத்தின் நிர்வாகி கீர்த்திவாசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக எம்.வி.ராவ் உள்ளிட்ட சென்டிரல் பேங்க் அதிகாரிகள் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.


No comments

Thank you for your comments