Breaking News

01-04-2024-ம் தேதி ராசி பலன்கள்



மேஷம்

 

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். அன்பு நிறைந்த நாள். 

அஸ்வினி : புரிதல் உண்டாகும்.

பரணி : விவாதங்கள் நீங்கும்.

கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.



ரிஷபம்

எதிலும் கவனத்தோடு செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். குழந்தைகளின் கல்வி தொடர்பான சிந்தனை மேம்படும். போட்டி சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாகன பயணத்தில் மிதவேகம் நல்லது. வித்தியாசமான சில கற்பனைகளால் மனதில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். அனுபவம் மேம்படும் நாள்.

கிருத்திகை : ஏற்ற, இறக்கமான நாள்.

ரோகிணி : சிந்தனை மேம்படும். 

மிருகசீரிஷம் : சோர்வுகள் உண்டாகும். 


மிதுனம்

தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். கொடுத்த வாக்கை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள். 

மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு ஏற்படும்.

திருவாதிரை : மேன்மை உண்டாகும். 

புனர்பூசம் :  சாதகமான நாள்.



 

கடகம்

திடீர் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் தெளிவு பிறக்கும். சுகம் நிறைந்த நாள். 

புனர்பூசம் : மாற்றம் உண்டாகும். 

பூசம் : சாதகமான நாள்.

ஆயில்யம் : தெளிவு பிறக்கும். 



சிம்மம்

குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. புதிய கலைகள் தொடர்பான தேடல் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள். 

மகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

பூரம் :  மாற்றங்கள் ஏற்படும். 

உத்திரம் : தேடல் உண்டாகும்.




கன்னி

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனை கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பயணம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பக்தி நிறைந்த நாள். 

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும். 

அஸ்தம் : ஆலோசனை கிடைக்கும்.

சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.



துலாம்

மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். அரசு வழியில் உதவிகள் சாதகமாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு திருப்தியை தரும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். இறைப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தகவல் தொடர்பு துறையில் புதிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நன்மை நிறைந்த நாள். 

சித்திரை : தன்னம்பிக்கை பிறக்கும்.

சுவாதி : தனவரவுகள் கிடைக்கும்.

விசாகம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.


விருச்சிகம்

எதிலும் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளில் தாமதம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உறவினர்கள் பக்க பலமாக செயல்படுவார்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு ஏற்படும். தொழிலில் சிறு சிறு மாற்றங்களின் மூலம் ஆதாயத்தை மேம்படுத்துவீர்கள். பகை விலகும் நாள். 

விசாகம் : ஆர்வமின்மையான நாள்.

அனுஷம் : பேச்சுக்களில் கவனம் வேண்டும்.

கேட்டை : மாற்றங்கள் உண்டாகும்.



தனுசு

சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதற்கான சூழல் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் ஏற்படும். வரவு நிறைந்த நாள். 

மூலம் : கவனம் வேண்டும்.

பூராடம் : வாய்ப்பு கிடைக்கும். 

உத்திராடம் : அனுகூலம் ஏற்படும்.




மகரம்

புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான ஒப்பந்தங்கள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். ரகசியமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசை பிறக்கும் நாள்.  

உத்திராடம் :  சிந்தித்துச் செயல்படவும். 

திருவோணம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.

அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.




கும்பம்

தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடிவரும். வெளிவட்டார நட்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் திருப்திகரமான சூழல் உண்டாகும். நலம் நிறைந்த நாள். 

அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.

சதயம் : மேன்மை ஏற்படும்.

பூரட்டாதி : திருப்திகரமான நாள்.



மீனம்

 

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான எண்ணங்கள் அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். நற்செய்தி கிடைக்கும் நாள்.

பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

உத்திரட்டாதி : தடைகள் விலகும்.

ரேவதி : வாய்ப்பு கிடைக்கும்.


No comments

Thank you for your comments