Breaking News

காஞ்சிபுரம் அருகே கள் விற்பனை செய்த வயதான தம்பதியர் கைது - 300 லிட்டர்கள் பறிமுதல்

காஞ்சிபுரம், மார்ச் 31:

காஞ்சிபுரம் அருகே ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் கள் விற்பனை செய்ததாக தென்காசியை சேர்ந்த வயதான தம்பதியரை மதுவிலக்குப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 300 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்துள்ளனர்.


காஞ்சிபுரம் அருகே ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் வயல் வெளி ஓரத்தில் தென்காசியை சேர்ந்த பாலசுப்பிரமணி(75) செல்லத்தாயி(70)வயதான தம்பதிகளான இவர்கள் கள் விற்பதாக மதுவிலக்குப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் வந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த கள்ளை சோதனை செய்த போது அதில் ரசாயணப் பொருட்கள், மைதா ஆகியனவும் கலந்திருந்தது.13 ஈச்சமரங்களிலிருந்து இறக்கப்பட்ட கள்ளை அவர்கள் 20க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குடங்களில் வைத்து விற்பனை செய்வதும் விசாரணையில் தெரிய வந்தது.

விசாரணைக்குப்பின்னர் வயதான தம்பதியரை கைது செய்து அவர்களிடமிருந்த 300 லிட்டர் கள் மற்றும் அவர்கள் விற்பனைக்கு பயன்படுத்திய 20க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குடங்கள் ஆகியனவற்றையும் பறிமுதல் செய்தனர். சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் மதுவிலக்குப்பிரிவு போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments