காஞ்சிபுரம் கற்பக விநாயகர் கோயிலில் திருவிளக்கு வழிபாடு
காஞ்சிபுரம், பிப்.2:
காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஊராட்சி வையாவூர் சாலையில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் தைமாத வெள்ளிக்கிழமையையொட்டி திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.
ஆலயத்தை சுற்றியுள்ள அண்ணா நகர், மூவேந்தர் நகர்,முருகன் நகர்,ஹெச்.எஸ்.அவின்யூ உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்கள் 100க்கும் மேற்பட்டோர் திருவிளக்கு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
திருவிளக்கு பூஜையை ஆலய அர்ச்சகர் ஹரீஸ் குருக்கள் நடத்தினார்.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக்குழு தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் அருள், அண்ணா நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் எம்.பாஸ்கரன், செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.
வழிபாட்டில் பங்கேற்ற பெண்களுக்கு திருவிளக்கு வழிபாட்டினை நடத்துவதற்கு தேவையான பொருட்கள், பிரசாதம் ஆகியனவும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
படவிளக்கம் : வையாவூர் கற்பக விநாயகர் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்ற பெண்கள்

No comments
Thank you for your comments