காஞ்சிபுரத்தில் ரத்த சேமிப்பு வங்கி திறப்பு விழா
காஞ்சிபுரம், பிப்.2:
சங்கரா பல்நோக்கு மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 300 பேரின் ரத்த மாதிரிகளை சேமித்து வைக்கும் ரத்த சேமிப்பு வங்கி திறப்பு விழா பணி ஓய்வு பெற்ற விங் கமாண்டர் வி.சங்கர் தலைமையில் நடைபெற்றது.
மருத்துவ மனையின் தலைமை நிர்வாக அலுவலர் பி.விஜயலட்சுமி,சங்கர கிருபா மருத்துவ அறக்கட்டளையின் பொருளாளர் வி.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பல்நோக்கு மருத்துவமனையின் செயல் அலுவலர் எம்.நந்தகுமார் வரவேற்று பேசினார்.
மருத்துவர் அமுதவல்லி தலைமையிலான மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ரூ.60லட்சம் மதிப்பிலான ரத்த சேமிப்பு வங்கியை ஹூண்டாய் டிரான்சிஸ் லேயர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குவாங்கோ லீ திறந்து வைத்து பார்வையிட்டார்.
விழாவில் ஹூண்டாய் டிரான்சிஸ் லேயர் நிறுவன துணை பொது மேலாளர் டி.மகேஷ்,மேலாளர் ஏ.வெங்கடேஷ்,மருத்துவனையின் செய்தித்தொடர்பாளர் ஸ்ரீராம் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மருத்துவமனையின் ரத்த பரிசோதனை அலுலலர் மோகன் நன்றி கூறினார்.
விழாவில் மருத்துவர்கள்,செவிலியர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments