Breaking News

காஞ்சிபுரத்தில் பிப்.1 முதல் 14 வரை கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

காஞ்சிபுரம், பிப்.1:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிப்.1 முதல் 14 ஆம் தேதி வரை கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டுக்கோழிகள் மற்றும் பிறவகை கோழிகளுக்கு கோடைக்காலங்களில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய் பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது.

கோழிகளுக்கு ஏற்படும் இந்த வெள்ளைக்கழிச்சல் நோயினைகடடுப்படுத்த அரசு கால்நடை மருந்தகங்களிலும் 15 நாட்களுக்கு ஒரு முறை அரசு கால்நடை மருத்துவ கிளை நிலையத்திலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கால்நடை பாதுகாப்புத் திட்ட முகாமாக நடைபெறும் இம்முகாமில் பிப்.1 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 1.35லட்சம் கோழிகளுக்கு  இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோழிகள் வளர்க்கும் அனைத்து பொதுமக்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் இதனால் கோழிகளின் இறப்பை தவிர்த்து அதிக லாபம் ஈட்டி பயன்பெறுமாறும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments