காஞ்சியில் பல்வேறு கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்டம், பதிவுத்துறை அறிவிப்பு 2022-2023-ன் கீழ், திருப்பெரும்புதூரில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடம் ரூ.185.83 இலட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணிக்கான கல்வெட்டினையும், பள்ளிக் கல்வித் துறைக்கு, நபார்டு திட்டம் RIDF XXIX திட்டம்-2023-2024-ன் கீழ், திருப்பெரும்புதூர் வட்டம், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 வகுப்பறை, 2 அறிவியல் ஆய்வகம் மற்றும் ஆண்கள் கழிப்பறை கட்டடம் ரூ.263.86 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் குன்றத்தூர் வட்டம்,
திருமுடிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 வகுப்பறை, 1 அறிவியல் ஆய்வகம் மற்றும் ஆண்கள், பெண்கள் கழிப்பறை கட்டடம் ரூ.144.14 இலட்சம் மதிப்பீட்டிலும், மலையம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8 வகுப்பறை மற்றும் ஆண்கள், பெண்கள் கழிப்பறை ஆகியவை ரூ.194.94 இலட்சம் மதிப்பீட்டிலும்,
பெரியார்நகர், நந்தம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 13 வகுப்பறை மற்றும் ஆண்கள், பெண்கள் கழிப்பறை கட்டடம் ரூ.349.86 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டும் பணிக்கான கல்வெட்டினையும், ஆக மொத்தம் ரூ.11.39 கோடி மதிப்பீட்டிலான
கட்டிடங்களுக்கு மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் புதியதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு அடிக்கல்லிற்கான கல்வெட்டினை திறந்து வைத்து, திருப்பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில், மாநில நிதிக்குழு மான்யம் (மாவட்ட ஊராட்சி)-2022-23 நிதியின் கீழ் எடையார்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டடம் ரூ.18.79 இலட்சம் மதிப்பீட்டிலும்,
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் II 2022-23 நிதியின் கீழ், கீவளூர் ஊராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டடம் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டும்பணிக்கான கல்வெட்டினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் 2020-21 நிதியின் கீழ், தண்டலம் ஊராட்சியில் அங்கன்வாடி மையக் கட்டடம் ரூ.10.19 இலட்சம் மதிப்பீட்டிலும்,
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் 2021-22 நிதியின் கீழ், தத்தனூர் ஊராட்சியில் தத்தனூரில் CSI- அங்கன்வாடி மையக் கட்டடம் ரூ.10.19 இலட்சம் மதிப்பீட்டிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் 2023-24 நிதியின் கீழ், பால்நல்லூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய சமையலறை கட்டடம் ரூ.7.43 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் 2022-23 நிதியின் கீழ், சந்தவேலூர் ஊராட்சியில் சித்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய சமையலறை கட்டடம் ரூ.7.43 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டும்பணிக்கான கல்வெட்டினையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் II 2021-22 நிதியின் கீழ் கிளாய் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ரூ.25.35 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் 2020-21 நிதியின் கீழ், கீவளுர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ரூ.22.65 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டும்பணிக்கான கல்வெட்டினையும்,
ஆக மொத்தம் ரூ.1,15,60,000/-மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடங்களுக்கு அடிக்கல்லிற்கான கல்வெட்டினையும் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வின் போது திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன். இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர், திரு.எஸ்.டி.கருணாநிதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.ஜெயக்குமார், செயற்பொறியாளர் திரு.கு.சிவசண்முகம் சுந்தரம், முதன்மை கல்வி அலுவலர் திருமதி. வெ.வெற்றிச்செல்வி, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments