Breaking News

தவறான செய்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - ஆவடி காவல் ஆணையர் எச்சரிக்கை



சென்னை  சாத்தாங்காடு சேர்ந்த செல்வி என்பவர்  தன்னுடைய குழந்தைகள் பிரகதி, மற்றும் சன்சிதா  ஆகியோர்  ஜோதி நகரில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் பயின்று வருவதாகவும்

 கடந்த 12/02/2024 -ம் தேதி  திங்கள்கிழமை பள்ளி முடித்து வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் ஜோதி நகர் 4-வது தெருவில் உள்ள தனலட்சுமி என்பவரிடம்  ஹிந்தி வகுப்புக்கு செல்லும் போது சுமார் 4.38 மணி அளவில் ஜோதி நகர் முருகன் கோவில் அருகில் வைத்து காரில் வந்த ஒரு நபர் பானிபூரி வாங்கி தரேன் வா என குழந்தைகளை  கூப்பிட்டதாக கூறி சமூக வலைதளங்களில் செல்வி என்பவர் ஆடியோ பரப்பி வருவதார்

இதனால் பொதுமக்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர் இது சம்பந்தமாக காவல் துறையினர் விசாரணை செய்ததிலும் மற்றும் CCTV ஆய்வு செய்திததிலும்  இது போன்ற நிகழ்வு ஏதும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது 

 இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி ஆகவே பொதுமக்கள் இந்த ஆடியவை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொண்டனர்  இது போன்ற வதந்திகளை பரப்பவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

செய்தியாளர் ஜெ. பிரேம்குமார் செல் 9444224025

No comments

Thank you for your comments