Breaking News

முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் - எம்எல்ஏ க.சுந்தர் பேச்சு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ  பேசினார்.




வாலாஜாபாத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது.  இந்த கூட்டத்திற்கு  காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம் எல் ஏ தலைமை தாங்கினார். 

மாவட்டத் துணைச் செயலாளர்கள்   ஜி. செல்வம் எம் பி, டி.வி.கோகுலக்கண்ணன், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ அனைவரையும் வரவேற்று பேசுகையில் 

கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு க ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1 ஆம் தேதி அன்று அனைத்து மாநகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளில் கொடியேற்றி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் 

மேலும்  காஞ்சிபுரம், மதுராந்தகம் அரசு  மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தும், நலத்திட்ட உதவிகள், வழங்கப்பட உள்ளது. எனவே இந்த நிகழ்ச்சிகளில் அனைத்து திமுக நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நாடாளுமன்ற தொகுதி கூட்டம் காஞ்சிபுரம் தேரடி காந்தி சாலையில் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  மாலை நடைபெறுகிறது. 

இந்த பரப்புரைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ. வ. வேலு,  கலந்து கொள்கிறார் இந்த கூட்டத்திற்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள்  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க வேண்டும் என க. சுந்தர் எம்எல்ஏ பேசினார். 

இதனைத் தொடர்ந்து  கூட்டத்தில் கழகத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்  மு க ஸ்டாலின்  பிறந்த நாளான மார்ச் 1-ம் தேதி அனைத்து கிளைக் கழகங்களிலும் கொடியேற்றி இனிப்பு வழங்கி  கொண்டாடி அன்று அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தும், நலத்திட்ட உதவிகள், அறுசுவை விருந்து அன்னதானம் வழங்கியும் சிறப்பாக கொண்டாடவேண்டும். 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியும் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நிய  முதலீடுகளை ஈர்த்தும் தமிழ்நாட்டில் தொழில் வளம் பெருகுவதற்கும்   லட்சக்கணக்கில் வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையிலும்  அரும்பாடு படும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழகம் பாராட்டி நன்றி கூறுகிறது.

சேலத்தில் கடந்த ஜனவரி 21 இல் இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாட்டை 6 லட்சத்திற்கும்  மேல் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்டமாக நடத்தி காட்டிய இளைஞரணி செயலாளர், மற்றும் ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டில்  தமிழ்நாட்டில் நடத்தி அகில இந்திய அளவில் 98 பதக்கங்களை வென்று இரண்டாவது இடம் பிடிக்க  செய்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி கூறி பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறது.

திமுக கட்சி சார்பில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்  பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர்  எ.வ. வேலு பங்கேற்கிறார் ஆயிரக்கணக்கில் அணி திரள்வோம்  மாநில உரிமையை மீட்கும் தலைவரின் குரலை ஓங்கி ஒலிக்க செய்வோம் என உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில்  காஞ்சிபுரம் எம்எல்ஏ  சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக்,செயற்குழு உறுப்பினர்கள் நாகன், நாராயணன், சுகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள்  வெளிக்காடு ஏழுமலை, சசிகுமார், ராஜேந்திரன்,  மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார், கெ. ஞானசேகரன்,  சாலவாக்கம் டி.குமார், சேகர், குமணன், கே.கண்ணன், ஜி. தம்பு, பி.எச்.சத்திய சாய், பென். சிவக்குமார், கே.எஸ். ராமச்சந்திரன், வி.ஏழுமலை, இ. சரவணன், ஏ. சிற்றரசு, எம் எஸ் பாபு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பேரூர் செயலாளர்கள் பாரிவள்ளல், பாண்டியன், சுந்தரமூர்த்தி, எழிலரசன்,  செங்கல்பட்டு மாவட்ட  மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள்   சிவராமன், ராஜா ராமகிருஷ்ணன் மாலதி செல்வராஜ், மாணவர் அணி துணை அமைப்பாளர்  சரளா தனசேகரன்,  உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments