வங்க தேசத்தை சேர்ந்த 3 பேர் மீது சதி திட்டம் தீட்டிய வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைப்பு
திருவள்ளூர் :
வங்க தேசம் நாட்டில் இருந்து தமிழகத்தில் வந்த 3 பேர் முறைகேடாக அரசு ஆவணங்களை தயாரித்து தீவிரவாத செயலில் ஈடுபட உள்ளனர் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கடந்த ஆண்டு நவம்பரில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், படப்பை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வங்க தேசம் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு முறைகேடாக வந்து தங்கி தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக பாபு(வயது 26), முன்னா (என்ற) நூர்கறீம் (வயது 26), சகாபுதின் உசேன்( வயது 27) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்கள் பின்னணியில், தொடர்பில் இருப்பவர்கள் யார், எது போன்ற சதி திட்டங்கள் தீட்டினார்கள் என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
இவர்களிடம் இருந்து போலி ஆவணங்கள், சிம் கார்டுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
பின்னர் 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று பூந்தமல்லி தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் வங்க தேசத்தைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றப்பத்திரிகையை நீதிபதி இளவழகனிடம் தாக்கல் செய்தனர்.
இதன் பின்னர் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தனர்

No comments
Thank you for your comments