நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், பெரமநல்லூர் கிராமத்தில், வேளாண்மை துறை சார்பில், இன்று (29.02.2024) 2023 – 24 நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டு நவரை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 25045 எக்டர் நெல் பயிரினை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் பொருட்டு நெல் நவரை பருவத்தில் 133 கிராமங்களில் / இடங்களில் தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1,09,682 மெ.டன் நெல் 20553 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு ரூ. 235.87 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதுபோல 2023-24 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவரை பருவத்தில் 26085 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்திட 130 தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளது.
கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளின் ஏ கிரேடு நெல்லுக்கு KMS 2023-24 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஆதார விலை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ. 2060 – ல் இருந்து ரூ. 2203 ஆக அரசால் உயர்த்தப்பட்டது. மேலும், ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 100 – ல் இருந்து ரூ. 107 ஆக தமிழக அரசால் உயர்த்தப்பட்டு விவசாயிகளின் ஏ கிரேடு நெல்லிற்கு ரூ. 2310/-குவிண்டால் வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல் பொது ரக நெல்லிற்கு குறைந்தபட்ச ஆதார விலை (குவிண்டால் ஒன்றுக்கு) ரூ. 2040/- ல் இருந்து ரூ.2183/- ஆக அரசால் உயர்த்தப்பட்டது. மேலும், ஊக்கத்தொகை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 75/– ல் இருந்து ரூ. 82/- ஆக தமிழக அரசால் உயர்த்தப்பட்டு விவசாயிகளின் பொது ரக நெல்லிற்கு ரூ. 2265/- குவிண்டால் வழங்கப்பட்டு வருகிறது.
பெரமநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 1078 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெற்பயிரினை கொள்முதல் செய்திடும் பொருட்டு இன்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் துவங்கப்படும். மேலும், மார்ச் மாதம் முதல் வாரத்திலிருந்து அறுவடைக்கு ஏற்ப காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைப்படும் கிராமங்களில் திறக்கப்பட்டு சீரான முறையில் நெல் கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், வேளாண்மை இணை இயக்குநர் முனைவர். பிரின்ஸ் கிளமென்ட், நேர்முக உதவியாளர் (வே) திரு.ஆர்.ராஜ்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளர் திருமதி.டி.அருள் வனிதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments