வேலூர், காகிதப்பட்டறையில் விதிகளை மீறிய இரண்டு கட்டடங்களுக்கு விரைவில் சீல்?
வேலூர், பிப்.5-
வேலூர், காகிதப்பட்டறையில் முறையான அனுமதி பெறாமல், Amendments to The Tamil Nadu Combined Development and Building Rules-ஐ மீறிய கட்டடத்தில் இயங்கும் ஹோட்டல்&தங்கும் விடுதி ஆகிய 2 கட்டடங்கள் மீது தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 மற்றும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 56, 57-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் சட்டப்பூர்வ அமலாக்க நடவடிக்கைகள் எடுக்க உள்ளூர் திட்ட குழுமம் கடிதம்(22-12-2023) அனுப்பியும் வேலூர் மாநகராட்சி சீல் வைக்காமல் மவுனம் காத்திருப்பது ஏன்? Tamil Nadu Local Bodies Ombudsman தாமாக முன் வந்து இதன் மீது நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments
Thank you for your comments