Breaking News

தேர்தல் அறிக்கை தயாரிக்க 38 குழுக்களை அமைத்த அண்ணாமலை - சூடுபிடிக்கும் தேர்தல் களம் 2024

 சென்னை: 

லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் பணிகளுக்காக 38 மேலாண்மை குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு எச்.ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. 

தமிழ்நாட்டை பொறுத்தவரை அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பேச்சுவார்த்தைக் குழு, தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை குழுக்கள் என்று அமைத்து தேர்தல் பணியை தீவிரப்படுத்தி உள்ளன.

மீண்டும் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் முன்களப் பணிகளை பாஜக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் - என் மக்கள் என்ற நடைபயணம் மூலம் தொகுதி வாரியாக மக்களை சந்தித்து மோடி ஆட்சியில் செய்த திட்டங்கள், சாதனைகள் என அனைத்தையும் சுட்டிக்காட்டியும், திமுக அரசின் குறைகளை விமர்சித்தும் வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பணிகளுக்காக 38 மேலாண்மை குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. 

தேர்தல் நிர்வாகம், தேர்தல் அலுவலகம், கால் செண்டர், அலுவலக நிர்வாகம், பிரச்சார உரை தயாரிப்புக் குழு என தனித் தனியாக குழுக்களை அமைத்துள்ளார் அண்ணாமலை.

பாஜக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி தலைமையிலான தேர்தல் மேலாண்மைக் குழுவின் பட்டியலை வெளியிட்டார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. 

தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் எம்.எல்.ஏ எச்.ராஜா தலைமையில், கேபி ராமலிங்கம், கார்வேந்தன், பேராசிரியர் ராம சீனிவாசன் ஆகிய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


குழு பட்டியல் : https://twitter.com/bjp4tamilnadu என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலை தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 


















No comments

Thank you for your comments