Breaking News

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் தா.மோ.அன்பரசன்

காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், படப்பை, வஞ்சுவாஞ்சேரி,  ராசி பொறியியல் கல்லூரியில் இன்று (17.02.2024) வேலைவாய்ப்பு முகாம், இளைஞர் திறன் திருவிழா மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு விற்பனையாளர் மற்றும் கொள்முதல் செய்வோருக்கான மாவட்ட அளவிலான கலந்துரையாடல் சந்திப்பு நிகழ்ச்சியினை  மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி மற்றும் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.


தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பினை வழங்கும் நோக்கத்தோடு தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா (DDU-GKY) திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நமது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டில் 1152 இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும் 890 இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்பும் ஏற்படுத்தி வழங்கப்பட்டுள்ளது.  2022-23 ஆம் நிதியாண்டில் 1564 இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும் 1060 இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்பும் ஏற்படுத்தி வழங்கப்பட்டுள்ளது.  2023-24 ஆம் நிதியாண்டில் 5 வட்டாரங்களிலும் வட்டார அளவிலான இளைஞர்திறன் திருவிழா மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1823 இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும் 132 இளைஞர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்பும் ஏற்படுத்தி இளைஞர்கள் தொழில் வாய்ப்பினை பெற்று அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இன்று ராசி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுடைய நிறுவனத்திற்கு தேவையான இளைஞர்களை தேர்வு செய்தனர். தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா (DDU-GKY) திட்டத்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்க 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இளைஞர்களை தேர்வு செய்ய வருகை தந்துள்ளனர்.   இளைஞர்கள் இந்த நல்லவாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற முன்னணி நிறுவனங்களில் நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையுமாறு மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு விற்பனையாளர் மற்றும் கொள்முதல் செய்வோருக்கான மாவட்ட அளவிலான கலந்துரையாடல் சந்திப்பு கூட்டத்தில்:

 மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் நோக்கத்தோடும் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் நடப்பாண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார மற்றும் மாவட்ட அளவில் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனையாளர் மற்றும் கொள்முதலாளர் சந்திப்பினை நடத்திட தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வட்டாரங்களிலும் வட்டார அளவில் விற்பனையாளர் மற்றும் கொள்முதலாளர் சந்திப்பு நடத்தப்பட்டு இதுவரையில்

22 நிறுவனங்களில் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை மொத்தமாக விற்பனை செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தற்போது மாவட்ட அளவில் நடைபெறும் விற்பனையாளர் மற்றும் கொள்முதலாளர் சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, விற்பனை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. எனவே  மகளிர் சுயஉதவிக் குழுக்கள் இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம், இளைஞர் திறன் திருவிழாவில் 100க்கு மேற்ப்பட்ட நிறுவனங்கள கலந்துக் கொண்டு 1237 வேலை நாடுநர்கள் பங்கேற்றனர் இதில் 294 நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புக்கும் மற்றும் 32 நபர்கள் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புக்கும் தேர்வாகியுள்ளனர்.   வாலாஜாபாத் ஒன்றியம், தென்னேரி ஊராட்சியில், இந்தியன் வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் மசாலா பொருட்கள் தயாரித்தல் பயிற்சி பெற்ற 5 மகளிருக்கு சான்றிதழ்கள்  மற்றும் 28 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 2.76 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி, மகளிர் சுயஉதவிக் குழுக்களால் அமைக்கப்பட்டிருந்த விற்பனை அரங்கினை பார்வையிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.வை.ஜெயக்குமார், குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன், மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.க.கவிதா,  உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) திரு.ப.திருமேனி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், விற்பனையாளர்கள் மற்றும் கொள்முதல் செய்வோர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர்.

 வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments