தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை நியமனம்..
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.
2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டார். கே.எஸ்.அழகிரி தலைமையில் தான் 2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை தமிழக காங்கிரஸ் கட்சி சந்தித்தது.
கட்சியின் விதிமுறைகளின்படி இவரது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு பிப்ரவரியுடன் நிறைவடைந்துவிட்டது. புதிய தலைவரைத் தேர்வுசெய்வதற்கான பணியில் காங்கிரஸ் தலைமை தீவிரம் காட்டியது. இதனால் தலைவர் பதவியை பிடிக்க காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வபெருந்தகை, கரூர் எம்.பி ஜோதிமணி, செல்லக்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில்,தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வ பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். செல்வ பெருந்தகை தற்போது தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments