Breaking News

ரதசப்தமி, சந்திர பிரபை வாகனத்தில் அழகிய சிங்கப் பெருமாள் காட்சி

காஞ்சிபுரம், பிப்.17:

காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை ரதசப்தமியையொட்டி உற்வசர் அழகிய சிங்கப் பெருமாள் காலையில் சூரிய பிரபை வாகனத்திலும்,மாலையில் சந்திர பிரபை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


படவிளக்கம்: ரதசப்தமியையொட்டி சந்திர பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் பவனி வந்த உற்சவர் அழகிய சிங்கப்பெருமாள்

வைணவத் திருத்தலங்கள் 108 இல் ஒன்றாக இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள அழகிய சிங்கப் பெருமாள் கோயில். இக்கோயிலில் ரதசப்தமியையொட்டி உற்சவர் அழகிய சிங்கப் பெருமாள் காலையில் சூரிய பிரபை வாகனத்தில் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் ஆலயத்தில் உற்சவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும் நடைபெற்றது.மாலையில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் அழகிய சிங்கப் பெருமாள் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் தீர்த்தம்,பிரசாதம் ஆகியனவும் வழங்கப்பட்டது.


No comments

Thank you for your comments