காஞ்சிபுரத்தில் மக்களவை உறுப்பினர் தொகுதியில் வளர்ச்சிப்பணிகள்-எம்பி அடிக்கல் நாட்டினார்
காஞ்சிபுரம், பிப்.17:
காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரிக்குப்பம், கருப்பந்தட்டை ஆகிய ஊராட்சிகளில் அந்தந்த பகுதி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தலா ரூ.9லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள் கட்ட அடிக்கல் நாட்டினார்.
இதனையடுத்து நரப்பாக்கம் ஊராட்சியில் ரூ.5லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டிருந்த பேருந்து பயணிகள் நிழற்கூடத்தை திறந்து வைத்துடன் முத்துவேடு ஊராட்சியில் ரூ.5லட்சம் மதிப்பில் பேருந்து பயணிகள் நிழற்கூடத்துக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.
இந்நிகழ்வுகளில் காஞ்சிபுரம் ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார்,துணைத் தலைவர் திவ்யா இளமருது, கருப்பந்தட்டை ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், நரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாரத், முத்துவேடு ஊராட்சி மன்ற தலைவர் ஜெனீட்டி பிரசாத்,வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமரன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
படவிளக்கம் : காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஊராட்சியில் புதிய நியாயவிலைக்கட்டிடம் கட்ட செங்கல்லை எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டிய மக்களவை உறுப்பினர் க.செல்வம்
No comments
Thank you for your comments