Breaking News

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வங்கல் ..

காஞ்சிபுரம் மாவட்டம், கீழம்பி திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (16.02.2024) நடைபெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி  வைத்து, முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.



படித்து வேலைவாய்ப்பினை எதிர்நோக்கியிருக்கும் இளைஞர்களுக்கு அதிக அளவில் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் பொருட்டு தமிழக அரசு சார்பில் பெரிய மற்றும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையுடன் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடைபெற்றது.

இன்றைய முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் 15000 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு இன்று நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஜனவரி வரை 125 சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களும் 14 பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு 15,341 நபர்கள் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.

 இவை தவிர்த்து அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. நாளிதழ்கள், மாத இதழ்கள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் இம்மையங்களில் பராமரிக்கப்படுகின்றன. மாதிரித் தேர்வுகள் மற்றும் மாதிரி நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – I, II, IV / VAO, VIIB & VIII, தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் (காவலர் மற்றும் உதவி ஆய்வாளர்), ஆசிரியர் தகுதித் தேர்வு, பணியாளர் தேர்வு வாரியம், வங்கிப்பணியாளர் தேர்வு நிறுவனம் (எழுத்தர், வங்கி உதவி மேலாளர்) மற்றும் இரயில்வே தேர்வு வாரியம், மத்திய அரசுப் பணியாளர் தேர்வுகள் போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 

தமிழக அரசின் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இதுவரை காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 63 நபர்கள் அரசுப்பணியில் இணைந்துள்ளனர். மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட அனைத்து வேலை நாடுநர்களுக்கும் வேலை கிடைக்க வாழ்த்துகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தெரிவித்தார். 

இவ்வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 85 நிறுவனங்கள் கலந்து கொண்டு, 1857 நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 346 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. மேலும் 340 நபர்கள் இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வாகி உள்ளனர்.

 இம்முகாமில்  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் திரு.ஆர்.அருணகிரி, திருமலை பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திரு. கார்த்திகேயன், திருமலை பாலிடெக்னிக் கல்லூரி பணி நியமன அலுவலர் திரு.அருண்குமார்,  அரசு  அலுவலர்கள்  மற்றும் பல்வேறு தனியார் நிறுவன அலுவலர்கள், வேலை நாடுநர்கள் கலந்து கொண்டனர்.


 

No comments

Thank you for your comments