Breaking News

தமிழ் திருக்குறளை பற்றி பேசும் பிரதமர் , தமிழ் வளர்ச்சிக்கு குறைவாக நிதி ஒதுக்கிறார்

மாநில அரசு வரி போடும் உரிமை இருந்தால் தான் அதை எப்படி செய்ய வேண்டும் என்று அரசு கண்காணித்து அதை நடைமுறைப்படுத்தும் ஆனால் ஒன்றிய அரசு தற்போது தன்வசம் அதை வைத்துக் கொண்டதால்  ஜிஎஸ்டி வரியை அதிகமாக இருக்கிறது. 


நமது காஞ்சிபுரம் எம்பி செல்வம் நாடாளுமன்றத்தில் வெங்காயம் விலை ஏறிவிட்டது பூண்டு விலை ஏறிவிட்டது என்று கூறினால் தமிழகத்தை சேர்ந்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காயமும் பூண்டும் எங்களுக்கு உணவில் சேர்த்துக் கொள்ள பழக்கமில்லை என்று பேசுகிறார் இதுதான் ஒன்றிய அமைச்சரின் குரலாக ஒலிக்கிறது என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார். 

மேலும் அவர் பேசியதாவது,   ஒன்றிய அரசு ரூ 100 ரூபாய் ஜிஎஸ்டி வழியாக வசூல் செய்தால் உத்தரப்பிரதேசத்திற்கு திரும்பி 331 திரும்பி அளிக்கிறது. பீகாரருக்கு 922 ரூபாயாக திருப்பி அளிக்கிறது. மத்திய பிரதேசத்தில் 729 திருப்பி அளிக்கிறது ராஜஸ்தானுக்கு 187 ரூபாயாக திருப்பி இருக்கிறது ஆனால் தமிழகத்திற்கு மட்டும் வெறும் 29 ரூபாய் திருப்பி வைக்கிறது இதன் மூலம் நமது உரிமை நாம் இழந்திருக்கிறோம் 

இந்த உதவியை மீட்க தான் இந்த பொதுக்கூட்டத்தின் வாயிலாக நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.மேலும் தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பாலங்கள் சேதமாயின .ஆனால்  ஒன்றிய அரசிடம் நிதி கேட்டால் நிதி வழங்கவில்லை. 

உத்தர பிரதேசத்தில் ஸ்டேடியம் கட்டுவதற்கு 8000 கோடி உத்தர பிரதேசத்தில் பசு பாதுகாப்புக்கு 750,  கோமியம் சாணி ஆராய்ச்சி செய்வதற்கான 500 கோடி என நிதி ஒதுக்கினார்கள் நமக்கு புரியாத சமஸ் பேச முடியாத சமஸ்கிருதத்திற்கு 643 கோடி ஒதுக்கினார்கள் நமது தாய் மகன் தமிழுக்கு 28 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்கள் 

எங்கு சென்றாலும் எந்த நாட்டுக்கு சென்றாலும் பிரதமர் தமிழ் திருக்குறளை பற்றி பேசுகிறார்.  தமிழ் வளர்ச்சிக்கு குறைவாக ஒதுக்கிறார். அதானிக்கு அம்பானிக்கும் பல பல கோடி ரூபாய் வாரா கடன் தள்ளுபடி என்று சொல்லி தள்ளுபடி செய்கிறார்.

எந்த முகத்தை வைத்துக்கொண்டு நீங்கள் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளீர்கள். அப்படி என்றால் மதுரையில் நீங்கள்ஏய்ம்ஸ் மருத்துவமனையை நீங்க தான் அறிவித்தீர்கள் ஆனால் இதுவரை அதை கட்டி முடிக்கப்படவில்லை கடந்த தேர்தலில் ஒரே செங்கல் வைத்துக் கொண்டு நமது உதயாநிதி ஸ்டாலின் உங்களை ஒட்டுமொத்தாக ஒழித்துக் கட்டினார். 

ஆகவே இந்த நாடாளுமன்ற தொகுதியில் 40-ம் நமதே என்று தாய்மார்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழம் நமது தமிழக முதல்வர் 40- தொகுதிகளும் வெற்றி பெறும் வகையில் நீங்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று என்ற கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.


தெற்கு மாவட்ட நிதி நிர்வாகிகள் இனியரசு ,கோகுல கண்ணன், மலர்விழி குமார், சன் பிராண்ட் ஆறுமுகம், வடக்கு மாவட்ட நிர்வாகிகள் து. மூர்த்தி, வெ. விஸ்வநாதன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் மாலிக் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் யுவராஜ் , கோல்ட் பிரகாஷ், மாநில மாவட்ட நிர்வாகிகள் சுகுமாரன், தி. அன்பழகன், பெ. சுந்தரவரதன், வி .எஸ். ராமகிருஷ்ணன், டாக்டர் சுபர்கான், வக்கீல் பச்சையப்பன், ரவீந்திரன், கே ஜி பாஸ்கர், எம்.நாதன், பரிதி இளம் சுருதி, தெற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் பி எம் குமார், பி எம் பாபு, ஞானசேகரன், பி சேகர், சத்திய சாய், குமணன், கண்ணன் ஏழுமலை சரவணன், வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் தமிழ்மணி, நரேந்திரன் , சண்முகம், குமார், எம் கே டி கார்த்திக், இதயவர்மன்,  பையனூர் சேகர், ஆராமுதன், சந்தானம், உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர் முடிவில் பகுதி செயலாளர் தசரதன் நன்றி  கூறினார்.

No comments

Thank you for your comments