மீண்டும் தலை தூக்கும் டிஜிடல் விளம்பரங்கள் கண்டுக்கொள்ளுமா தமிழக அரசு
மீண்டும் தலை தூக்கும் டிஜிட்டல் விளம்பர பலகைகள்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வருகை ஒட்டி ஆவடி முழுவதுமாக டிஜிட்டல் பேனர்களால் நிரப்பப்பட்டு உள்ளது எத்தனை உயிர்கள் பலி ஆனாலும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆவடி மாநகராட்சி நிர்வாகம் இவர்களுக்கு டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்காக அனுமதி வழங்கி உள்ளது இதனால் பாரதிய ஜனதா கட்சியினர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆவடி மாநகரம் முழுவதுமாக டிஜிட்டல் பேனர் வைத்துள்ளர் இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகச் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் போக்குவரத்து காவல்துறையில் புகார் அளித்தால் இதனை நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது இது மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது ஆகவே நீங்கள் அவர்களிடத்தில் தான் முறையிட வேண்டும் என்று தெரிவிக்கின்றன பொதுமக்கள் எப்படி போனாலும் எத்தனை உயிர்கள் பலியானாலும் இவர்கள் டிஜிட்டல் பேனர் வைப்பதை நிறுத்த முடியாது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றன இதுபோல் டிஜிட்டல் விளம்பர பலகை வைக்க அனுமதி வழங்கிய ஆவடி மாநகராட்சி நிர்வாகத்தின் மீது முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்
No comments
Thank you for your comments