Breaking News

காஞ்சிபுரத்தில் புத்தகத்திருவிழா நிறைவு,ரூ.65லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

காஞ்சிபுரம்,பிப்.20:

காஞ்சிபுரத்தில் கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த புத்தகத்திருவிழா திங்கள்கிழமை நிறைவு பெற்ற போது விழாவில் ரூ.65லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி இருப்பதாக ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேசினார்.

படவிளக்கம்: நிறைவு விழாவில் எழுதுக அமைப்பின் சார்பில் புதியதாக புத்தகம் எழுதிய மாணவ,மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் கேடயமும் வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் இம்மாதம் 9 ஆம் தேதி புத்தகத்திருவிழா தொடங்கி 19 ஆம் தேதி வைரை தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்றது.இதன் நிறைவு விழாவிற்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து விழாவில் சி றப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் 171 பேர்,சிறப்பாக பணியாற்றிய துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக எழுதுக அமைப்பின் சார்பில் புதியதாக புத்தகம் எழுதி பிரசுரமாகி இருந்த 14 எழுத்தாளர்களாகிய மாணவர்களுக்கு ஆட்சியர், பாராட்டுச் சான்றிதழும் கேடயமும் வழங்கி பேசியதாவது..

மாவட்ட நிர்வாகமும்,தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து 11 நாட்கள் புத்தகத் திருவிழா காஞ்சிபுரமே பாராட்டும்படி நடைபெற்றது.இதில் அமைக்கப்பட்டிருந்த 100 புத்தக அரங்குகள் மூலமாக ரூ.65லட்சம் மதிப்பிலான 50 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளது.

கடந்த 11 நாட்களும் மொத்தம் 3 லட்சம் பார்வையாளர்கள் புத்தக அரங்குகளையும்,விழாவில் நடந்த கலைநிகழ்ச்சிகளையும் பார்வையிட்டுள்ளனர். தினசரி காலையில் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும்,மாலையில் சிறப்பு பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும்,பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டதாகவும் ஆட்சியர் பேசினார்.

விழாவிற்கு காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம்,மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,கோட்டாட்சியர்கள் மு.கலைவாணி,ஐ.சரவணக்கண்ணன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உணவுப் பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் அனுராதா வரவேற்று பேசினார்.

விழாவில் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள்,பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்கள்,பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments