காஞ்சிபுரத்தில் பழுதடைந்த பாதாள சாக்கடைப் பைப்புகளை புதியதாக அமைத்துத் தரக் கோரிக்கை மனு
காஞ்சிபுரம், பிப்.20:
காஞ்சிபுரம் காந்தி சாலை இரும்புக்கடை சந்து பொதுமக்கள் மற்றும் நிஷான் தர்கா தலைவர் ஹசரத் மஹபூபே சுபஹானி தலைமையிலான குழுவினர் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது...
காஞ்சிபுரம் நகர் சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் இரும்புக்கடை சந்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.எங்கள் தெருவில் 45 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பாதாள சாக்கடையின் மண் பைப்புகள் தற்போது பழுதடைந்து சுமார் 10 ஆண்டு கால கழிவுகள் தேக்கமடைந்து கழிவு நீர் செல்ல முடியாமல் உள்ளது.
கழிவு நீர் குளம் போல தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் இருந்து வருகிறது.பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் முதல் முதியோர்கள் வரை கழிவுநீரிலேயே நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே எங்கள் பகுதியில் 45 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பழைய கழிவுநீர் மண் பைப்புகளை அகற்றி விட்டு புதிய பாதாள சாக்கடைப் பைப்புகளை அமைத்துத் தர வேண்டும் என்றும் அக்கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.
படவிளக்கம்}புதிய பாதாளச் சாக்கடைப் பைப்புகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளிக்க வந்திருந்த இரும்புக்கடை சந்து பொதுமக்கள்
No comments
Thank you for your comments