தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு உணவு பரிமாறிய கலெக்டர் கலைச்செல்வி மோகன்
காஞ்சிபுரம்
- தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு உணவு பரிமாறிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்
- மாவட்ட ஆட்சியரின் செய்கையால் மனம் நெகிழ்ந்து போன பொதுமக்கள்.
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்டம் தோறும் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடத்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகன் கோவிலில் நடைபெற்றது.
தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் சமபந்தி விருந்தில் கலந்துகொண்டு உணவருந்த வந்து சமபந்தியில் அமர்ந்த பொது மக்களுக்கு தன் கையால் உணவு வகைகளை பரிமாறினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி, ஆகியோர் மக்களோடு மக்களாக அமர்ந்து கொண்டு உணவருந்தினார்கள்.
சமபந்தி விருந்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கூட்டு, பொரியல், அப்பளம்,வடை, பாயாசம், ஜாங்கிரி,என அறுசுவையுடன் கூடிய உணவு வழங்கப்பட்டது.
பெயரளவிற்கு வந்து மக்களோடு மக்களாக அமர்ந்து உணவருந்தி விட்டு செல்பவர்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் என்பதனையும் பாராமல் சமபந்தியில் உணவருந்த வந்து அமர்ந்த மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உணவு பரிமாறிய சம்பவம் பொதுமக்களிடையே நெகழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வட்டாட்சியர் காஞ்சனா மாலா, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் அரசு அலுவலர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு உணவருந்தி விட்டு சென்றனர்.
Post Comment
No comments
Thank you for your comments