கூட்டுறவுத்துறையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை - ஆட்சியர் வழங்கினார்
காஞ்சிபுரம், பிப்.2:
காஞ்சிபுரம் மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு கடந்த 24.12.23 ஆம் தேதி நடைபெற்றது.அதில் தேர்ச்சி பெற்ற 83 நபர்களுக்கு கடந்த 19.1.24 அன்று நேர்முககத் தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வுகளில் ஒட்டு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும்,இடஒதுக்கீடு மற்றும் இனச்சுழற்சி முறையின் அடிப்படையிலும் 43 நபர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கான பணி நியமன ஆணைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.உடன் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீயும் உடன் இருந்தார்.

No comments
Thank you for your comments