Breaking News

சாலை ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திருவள்ளூர் :

திருவேற்காடு 10 வது வார்டில் சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி  பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். 



திருவேற்காடு நகராட்சி, 10 ஆவது வார்டில் ராஜரத்தினம் நகர் உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த 1992 ஆம் ஆண்டு வீட்டு மனைகள் உருவாக்கப்பட்டன. அப்போது, அங்கு 10க்கும் மேற்பட்ட சாலைகள் அமைக்கப்பட்டு, அவைகள் அனைத்தும் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்குள்ள சாலைகளை நகராட்சி நிர்வாகத்தினர் பராமரித்து வருகின்றனர். 

இந்த நிலையில், அங்குள்ள ராஜரத்தினம் நகரில் 6-ஆவது தெருவில் இருந்து 5-ஆவது தெருவுக்கு செல்லும் சாலையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து சாலை தனக்கு சொந்தம் கொண்டாடி வருவதாக கூறப்படுகிறது.

இதனால்  சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் சாலை மீட்டு கொடுக்க வேண்டும் என  10 வது வார்டு கவுன்சிலர் நளினி குருநாதன் தலைமையில்  50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

அப்போது ராஜரத்தினம் நகரில் 6-ஆவது தெருவில் சாலையை ஆக்கிரமித்துள்ள நபரால் போக்குவரத்து இடையூறாக உள்ளதாகவும், 5- ஆவது தெருவில் இருந்து 6-ஆவது தெருவிற்கு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அதே போல் ரூ.50 லட்சம் மதிப்பிலான அரசு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து உள்ளார் என கூறி பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். மேலும், மேற்கண்ட பிரச்சினைகள் தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் வலியுறுத்தினர்

மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாச்சியர் தெரிவித்தார் இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்

No comments

Thank you for your comments