பயணி தவறவிட்ட கைப்பையை போலீஸôரிடம் ஒப்படைத்த மாணவர்கள்
காஞ்சிபுரம், ஜன.3:
படவிளக்கம் : சாலையில் கண்டு எடுக்கப்பட்ட கைப்பையை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜூவிடம் ஒப்படைத்த பள்ளி மாணவர்கள்
காஞ்சிபுரம் அருகே கீழம்பி கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் மற்றும் பிரேம்குமார்.இருவரும் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகின்றனர்.இவர்கள் காஞ்சிபுரம் கீரை மண்டபம் பகுதியில் பள்ளிக்கு செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்த போது சாலையில் (மணிப்பர்ஸ்) கைப்பை ஒன்று கிடந்ததை கண்டு எடுத்தனர்.
பின்னர் அதனை அருகிலிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் துரைராஜிடம் உரியவரிடம் ஒப்படைத்து விடுமாறு கூறி வழங்கினர்.மாணவர்களின் இச்செயலை பள்ளித் தலைமை ஆசிரியர்,ஆசிரியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும் பாராட்டினார்கள்.
கண்டு எடுக்கப்பட்ட கைப்பை காஞ்சிபுரம் அருகே வளத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த வரதராஜன் என்பவருக்குரியது எனத் தெரிய வந்தது.அந்தக் கைப்பையில் 3 ஏடிஎம் கார்டுகள்,ஆதார் அட்டை மற்றும் மார்பளவு புகைப்படங்கள் ஆகியனவும் இருந்தது.கைப்பைக்கு உரியவர் யார் எனக் கண்டு பிடித்து விரைவில் ஒப்படைக்கப்படும் எனவும் உதவி ஆய்வாளர் துரைராஜூ தெரிவித்தார்.

No comments
Thank you for your comments