ரசிகையுடன் நடிகர் அஜீத் நடன வீடியோ வைரல்
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் அஜித்குமார் தன் குடும்பத்தினருடன் புத்தாண்டைக் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், ஒரு பெண்ணுடன் மகிழ்ச்சியாக அஜித் நடனமாடும் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
#AjithKumar celebrating the new year 🎉His dance👌🕺..... enjoying his life happily in his own way♥️✨pic.twitter.com/7kX0ULpGNc— AmuthaBharathi (@CinemaWithAB) January 3, 2024

No comments
Thank you for your comments