காஞ்சிபுரத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், ஜன.3:
பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் காவலான் கேட் பகுதியில் மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்க மாவட்ட தலைவர் பி.ராஜவேலு தலைமை வகித்தார்.
காஞ்சிபுரம் ஒன்றியத்தின் தலைவர் வி.கண்ணன்,வாலாஜாபாத் ஒன்றியத்தின் தலைவர் செந்தமிழ் செல்வன்,துணைத் தலைவர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,மக்கள் நலப்பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,தேர்தல் அறிவிக்கையில் கூறியிருந்தபடி வாரிசு வேலை வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் சத்யராஜ் உட்பட மாவட்டம் முழுவதும் சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments