Breaking News

காமாட்சி அம்மன் அருளால் தசரத மன்னருக்கு ராமர் பிறந்தார் என்பதை விவரிக்கும் சிற்பங்கள்!

காஞ்சி காமாட்சி அம்மன் அருளால் தசரத மன்னருக்கு ராமர் பிறறந்தார் என்பதை விவரிக்கும் சிற்பங்கள் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ளன. இதை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வியந்து வருகின்றனர்.


காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் ஆகியவற்றைற ஆன்மோதயா ஆசிரத்தில் தங்கியுள்ள ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காமாட்சி அம்மன் கோயில் வசந்த மண்டபத்தில் தசரத மன்னர் புத்ரகாமேஷ்டி யாகம் செய்தது, ராமர் பிறறந்தது, வாலி வதம், ராவணன் கைலாச பர்வதத்தைத் தூக்கிச் செல்லுதல், ராவணன் அனுமனை அவமானப்படுத்துதல், ராமர் வனவாசத்துக்குப் புறறப்படுதல் உள்ளிட்டவை அழகிய சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இந்த சிற்பங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வியந்தனர்.

இது குறித்து காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் கூறியதாவது:

அயோத்தி மன்னர் தசரதருக்கு குழந்தை இல்லை என்றற கவலையால், தனது குல தெய்வமான திரிபுரசுந்தரி அம்மனை வேண்டிய போது அம்மன் அசரீரியாக வந்து காஞ்சி காமாட்சி அம்மனை தரிசித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டாராம்.

அதன்படி காஞ்சிபுரம் வந்து புத்ரகாமேஷ்டி யாகம் செய்த பின்னர் காமாட்சியின் அருளால் தசதருக்கு ராமர் பிறறந்துள்ளார். இது குறித்த சிற்பங்கள் காமாட்சி அம்மன் கோயில் வசந்த மண்டபத்தில் உள்ளன.

அயோத்தி ராமர் கோயிலில் ஸ்ரீராமர் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி, இந்தச் சிற்பங்கள் பொதுமக்கள் பார்வைக்காக அழகுபடுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

No comments

Thank you for your comments