காஞ்சிபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் - 343 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன
காஞ்சிபுரம்,ஜன.22:
கூட்டத்துக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், பயிற்சி ஆட்சியர் க.சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 343 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை துறை சார்ந்த அலுவலர்களுக்கு தீர்வு காணுமாறு ஆட்சியர் அனுப்பி வைத்தார். அரசின் பல்வேறு துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
படவிளக்கம் : குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியர் கலைச்செல்வி மோகன்


No comments
Thank you for your comments