Breaking News

எம்ஜிஆர்.பிறந்த தினம்,காஞ்சிபுரத்தில் அதிமுகவினர் எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி

காஞ்சிபுரம்,ஜன.17:

காஞ்சிபுரத்தில் எம்ஜிஆரின் பிறந்த தினத்தையொட்டி நகரில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை அதிமுகவினர் எம்ஜிஆரின் உருவப்படத்தை திறந்து வைத்து அந்தந்த இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினார்கள்.

படவிளக்கம் : காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரில் முன்னாள் அமைச்சரும்,மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய அதிமுக நிர்வாகிகள்

அதிமுக நிறுவனரும்,முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 107 வது பிறந்த தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாநகரில் ஓரிக்கை,ஆட்சியர் அலுவலகம் அருகில்,காந்தி சாலையில் தேரடி,கருக்குப்பேட்டை,களக்காட்டூர் ஆகிய இடங்களில் எம்ஜிஆரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன்,மைதிலி திருநாவுக்கரசு,முன்னாள் எம்பி காஞ்சி.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் எம்ஜிஆரின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து அந்தந்த இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் எம்ஜிஆர் இளைஞர் அணியின் மாநில செயலாளர் எஸ்எஸ்ஆர்.சத்யா, மாவட்டப் பொருளாளர் வள்ளிநாயகம்,ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யு.சோமசுந்தரம், களக்காட்டூர் செயலாளர் ராஜூ ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

முன்னதாக வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆரின் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


No comments

Thank you for your comments