Breaking News

பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம், ஜன.17:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகேயுள்ள பெருநகரில் அருள்பாலித்து வரும் பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தைப்பூசத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


படவிளக்கம் : பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலின் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதல் நிகழ்ச்சியாக சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்த விநாயகர்

பிரம்மன் சிவனை வழிபட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்கது காஞ்சிபுரம் அருகே பெருநகரில் அமைந்துள்ள பட்டு வதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்.ஆண்டு தோறும் இக்கோயிலில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டுக்கான தைப்பூசத் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை முதல் நிகழ்ச்சியாக விநாயகர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புதன்கிழமை காலையில் கொடியேற்றமும்,பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்றது.கோயில் அர்ச்சகர் மூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.

வரும் 21 ஆம் தேதி இரவு திருக்கல்யாண வைபவமும் அன்று அதிகாலையில் ரிஷபவாகனக் காட்சியும், 

23 ஆம் தேதி தேரோட்டமும், 

25 ஆம் தேதி 63 நாயன்மார்கள் புறப்பாடும் நடைபெறுகிறது.

வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு செய்யாறில் 21 சிவாலயங்களிலிருந்து சுவாமி புறப்பாடாகி ஒன்றாக இணைந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளனர்.சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.

இதன் தொடர்ச்சியாக 27 ஆம் தேதி கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை தொண்டை மண்டல சைவ வேளாளர் மரபினர்கள் செய்திருந்தனர்.


No comments

Thank you for your comments