Breaking News

காஞ்சி ஆதிகாமாட்சி அம்மன் கோயிலில் கருங்கல் நுழைவுவாயில் அமைக்க முடிவு

காஞ்சிபுரம், ஜன.17:

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் கோயில் முன்பாக கருங்கல் நுழைவுவாயில் ரூ.71லட்சத்தில் அமைக்க அரசு அனுமதி வழங்கி இருப்பதாக அக்கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் பி.ஏழுமலை புதன்கிழமை தெரிவித்தார்.

படவிளக்கம் : திருப்பணிகள் நடந்து வரும் காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் திருக்கோயில் கோபுரங்கள்

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-

வரலாற்றுச் சிறப்பும்,பழமையும் உடைய காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் திருக்கோயில் திருப்பணிக்கான பாலாலயம் கடந்த 1.9.22 ஆம் தேதி நடைபெற்றது.இதனையடுத்து கோயில் திருப்பணிகளை தொடங்கினோம்.கோயிலின் உள்ளே மற்றும் வெளிப்பிரகாரம் முழுவதும் ரூ.70லட்சம் மதிப்பில் கருங்கல் தரைத்தளமாக மாற்றப்பட்டுள்ளது.

மகா மண்டபத்தின் மேல்தளத்தில் ரூ.15லட்சம் மதிப்பில் சீதோஷ்ண ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளது.இவை தவிர இதர பணிகள் ரூ.10லட்சத்தில் நடைபெற்றுள்ளது.கோயிலுக்கு முன்பாக கருங்கலால் அழகிய நுழைவுவாயில் ரூ.71லட்சம் மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதற்கான அனுமதியையும் அறநிலையத்துறை வழங்கியுள்ளது.

கருங்கல் நுழைவுவாயில் அமைக்கும் பணி,கோயில் கொடிமரத்துக்கும்,கோபுர கலசங்களுக்கும் தங்கமுலாம் பூசும்பணி ஆகியன விரைவில் தொடங்கப்படவுள்ளது.இவை தவிர விஷ்வகர்மா,காயத்திரி சந்நிதிகள் புதியதாகவும், மூலஸ்தானத்தில் கருங்கல் பதிக்கும் பணிகளும் தொடங்கப்படவுள்ளன.வரும் சித்திரை மாதம் மகா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்திருப்பதால் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் பக்தர்கள் திருப்பணிக்கு நன்கொடைகள் கொடுத்து உதவிடுமாறும் பி.ஏழுமலை தெரிவித்தார்.


No comments

Thank you for your comments