Breaking News

போசியா விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற மாற்றுத்திறனாளி மாணவியை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து வாழ்த்தினார்

உலக மாற்றுத்திறனாளி  போசியா விளையாட்டு போட்டியில் வெள்ளி வென்ற மாற்றுத்திறனாளி மாணவியை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து வாழ்த்தினார்



காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவி காயத்திரி மாற்றுத்திறனாளிக்கென பிரத்தியேகமாக விளையாடும் வீல்சேர் பந்து வீசும் விளையாட்டான போசியா எனப்படும் விளையாட்டு வீரராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் கோவா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்தியேகமாக நடைபெற்ற உலக அளவில் சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கென பந்து வீசும் போசியா போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் பங்கேற்ற காஞ்சிபுரம் மாணவி காயத்ரி போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

உலக அளவில் போட்டியில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி மாணவி காயத்ரியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

No comments

Thank you for your comments