Breaking News

ஐயம்பேட்டை மோகாம்பரி அம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்த உற்சவர் சுப்பிரமணிய சுவாமி

காஞ்சிபுரம், ஜன.16:

காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டையில் உள்ள மோகாம்பரி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை பொங்கல் விழாவையொட்டி மோகாம்பரி அம்மனும், சுப்பிரமணிய சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


படவிளக்கம்: பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்த உற்சவர் சுப்பிரமணிய சுவாமி

காஞ்சிபுரம் அருகே ஐயம்பேட்டை கீழ்த்தெருவில் அமைந்துள்ளது மோகாம்பரி அம்மன் திருக்கோயில்.இக்கோயிலில் பொங்கல் விழாவை கொண்டாடும் விதமாக மோகாம்பரி அம்மனுக்கும், ஆலயத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

ஆலயத்தின் சார்பிலும் கிராம பொதுமக்கள் சார்பிலும் பலரும் பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.ஆலயத்தில் உள்ள உற்சவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


No comments

Thank you for your comments