Breaking News

காஞ்சிபுரம் நாராயண சேவாஸ்ரமத்தில் குருபூஜை

காஞ்சிபுரம், ஜன.30:

காஞ்சிபுரம் ஸ்ரீநாராயண சேவாஸ்ரமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குருபூஜை நிகழ்ச்சியில் தனியார் நிறுவனத்தின் தலைவரது சேவையப்பாராட்டி சேவாஸ்ரமத்தின் பொதுச்செயலாளர் சுவாமி சுபாங்கானந்தா விருது வழங்கி கௌரவித்தார்.


படவிளக்கம் : ஸ்ரீநாராயண தர்மசங்க அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சுவாமி சுபாங்கானந்தாவிடமிருந்து குரு தரமரத்னா புரஸ்கார் விருதை பெற்றுக்கொள்கிறார் பிஎல்எம் நிறுவனத்தின் தலைவர் ஆர்.பிரேம்குமார்

கேரளமாநிலத்தில் ஸ்ரீநாராயண தர்மசங்கம் அறக்கட்டளை அமைப்பு செயல்பட்டு வருகிறது.  இதன் கிளை காஞ்சிபுரத்தில் உள்ள ஆழ்வார் பங்களா பகுதியில் ஸ்ரீநாராயண சேவாஸ்ரமம் என்ற பெயரில் செயல்படுகிறது. 

கல்வி, மருத்துவச் சேவையை செய்து வரும் இந்த ஆசிரமத்தின் நிர்வாகிகளாக இருந்த கோவிந்தானந்தா சுவாமிகளின் 93 வது குருபூஜை, ஆத்மானந்தா சுவாமிகளின் 54 வது குருபூஜை, சித்ருபானந்தா சுவாமிகளின் 18 வது குருபூஜை மற்றும் சுவாமி சத்ருபானந்தா குருபூஜை ஆகியன காஞ்சிபுரம் சேவாஸ்ரமத்தில் நடைபெற்றது.

சேவாஸ்ரமம் காஞ்சிபுரம் கிளையின் தலைவர் சுவாமி யோகானந்த தீர்த்தா குருபூஜை நிகழ்விற்கு தலைமை வகித்தார். 

அறக்கட்டளையின் பொருளாளர் சாரதானந்தா,காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.காஞ்சிபுரம் நாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் கே.ரங்கராஜன் வரவேற்று பேசினார்.

ஸ்ரீநாராயண தர்மசங்கம் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சுவாமி சுபாங்கானந்தா நிகழ்வை தொடக்கி வைத்ததுடன் பிஎல்எம் என்ற தனியார் நிறுவனத்தின் தலைவர். ஆர்.பிரேம் குமாரின் தர்மசேவையைப் பாராட்டி குருதர்மரத்னா புரஸ்கார் விருது வழங்கி கௌரவித்தார். 

நிகழ்வில் சுகுணானந்தா, பத்மானந்தா, திருப்பரங்குன்றம் ஸ்ரீசாந்தலிங்க சுவாமிகள் மடத்தின் செயலாளர் வீரேஸ்வரானந்தா ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments