Breaking News

பிப்.9 முதல் பிப்.19 வரை காஞ்சிபுரத்தில் புத்தகத் திருவிழா, விளம்பரப் பதாகையை வெளியிட்டார் ஆட்சியர்

காஞ்சிபுரம், ஜன.29:

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் வரும் பிப்.9 ஆம் தேதி முதல் பிப்.19 ஆம் தேதி வரை 11 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற இருப்பது தொடர்பான விளம்பரப் பதாகையை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திங்கள்கிழமை வெளியிட்டார். 


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 2 வது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.

வரும் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினரால் 100 புத்தக அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

குழந்தைகளின் வாசிக்கும் திறனை மேம்படுத்தவும்,பள்ளி மாணவர்களுக்கு தினசரி பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் சிறந்த பேச்சாளர்கள்,சிந்திக்க வைக்கும் பட்டிமன்றங்கள், மனதை மகிழ்விக்கும் கலைநிகழ்ச்சிகள் போன்றவையும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புத்தகத்திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் 5 பேருக்கு புத்தகங்கள் குலுக்கல் முறையில் பரிசாக வழங்கப்படவுள்ளது.

புத்தகத்திருவிழா தொடர்பான விளம்பரப் பதாகையை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மக்கள் குறை தீர்க்கும் கூட்ட நிகழ்வின் நிறைவில் வெளியிட்டார்.பொதுமக்கள் புத்தகத்திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் :

காஞ்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,ஆட்சியர்(பயிற்சி) க.சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 400 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கு தீர்வு காணுமாறும் ஆட்சியர் பரிந்துரை செய்தார்.

No comments

Thank you for your comments