எம்ஜிஆர்.பிறந்த தினம், முத்தியால் பேட்டையில் ஓபிஎஸ் அணியினர் அன்னதானம்
காஞ்சிபுரம், ஜன.17:
முன்னாள் முதலமைச்சரும்,அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் 107 வது பிறந்த தினம் காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் ஓபிஎஸ் அணியினர் சார்பில் கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் திருஉருவப் படத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
படவிளக்கம் : எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி முத்தியால்பேட்டையில் நடைபெற்ற அன்னதானத்தை தொடக்கி வைத்த ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார்
பின்னர் காலை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் வஜ்ரவேலு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


No comments
Thank you for your comments