Breaking News

போட்டித்தேர்வுகளில் விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது - காஞ்சிபுரம் பயிற்சி ஆட்சியர் பேச்சு

காஞ்சிபுரம், ஜன.11:

போட்டித் தேர்வுகளில் விழிப்புணர்வு குறைவாக இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்டத்தின் பயிற்சி ஆட்சியர் க.சங்கீதா வேலைவாய்ப்புத்துறை கருத்தரங்கை வியாழக்கிழமை தொடக்கி வைத்து பேசும்போது குறிப்பிட்டார்.

படவிளக்கம் : பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட பயிற்சி ஆட்சியர் க.சங்கீதா

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இர.தேவேந்திரன் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.துணை இயக்குநர் ஆர்.அருணகிரி வரவேற்று பேசினார்.

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கருத்தரங்கை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து காஞ்சிபுரம் பயிற்சி ஆட்சியர் க.சங்கீதா பேசியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 88 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியமற்றது.போட்டித் தேர்வுகளில் விழிப்புணர்வு குறைவாக இருப்பதாலும் இளைஞர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர்.

யுபிஎஸ்சி,டிஎன்பிஎஸ்சி,எஸ்எஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளைப் பற்றித்தான் பலருக்கும் தெரிந்திருக்கிறது.இதைத் தவிர வேறு போட்டித் தேர்வுகள் ஏராளமாக உள்ளன. 

அத்தேர்வுகளையும் எழுதி வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.கடினமாக உழைத்தால் ஒரே ஆண்டில் ஆட்சியராகவும் வர முடியும்.அப்படி பலரும் வந்திருக்கிறார்கள் என்று பேசினார்.

கருத்தரங்கில் புள்ளியியல் துறை துணை இயக்குநர் கே.குப்புசாமி,வேலூர் டிப்ஸ் அகாதெமி இயக்குநர் என்.எஸ்.விஜய கணேஷ்,செயின்ட் கோபின் நிறுவன மனித வள மேலாளர் பி.யுவராஜ்,இளம் தொழில் வல்லுநர் ஆர்.ராதிகா ஆகியோரும் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.சங்கரா கல்லூரி பணி நியமன அலுவலர் வினுசக்கரவர்த்தி நன்றி கூறினார்.


No comments

Thank you for your comments