Breaking News

காஞ்சிபுரம் வேணுகோபால சுவாமி கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

காஞ்சிபுரம், ஜன.11:

காஞ்சிபுரம் வேணுகோபால சுவாமி கோயிலில் மண்டாலாபிஷேக நிறைவு நாளையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் வியாழக்கிழமை நடைபெற்றன.

மண்டலபூஜையையொட்டி பக்தர்களுக்கு காட்சியளித்த மூலவர் வேணுகோபாலசுவாமி.உடன் உற்சவர் வேணுகாபாலசுவாமி

காஞ்சிபுரம் ஒ.பி.குளம் தெருவில் இருந்த பழமையான வேணுகோபால சுவாமி திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டு கடந்த 24.11.23 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தின் போது ஆலயத்தில் 6 அடி உயர வேணுகோபால சுவாமி விக்ரகம் புதியதாக செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக மண்டல பூஜை தொடர்ந்து 48 நாட்களாக நடந்து அதன் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.மண்டலபூஜை நிறைவையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர் வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனைகள் நடைபெற்றன. 

ஏற்பாடுகளை திருக்கோயில் ஆலய அறங்காவலர் ராஜேந்திரன்தலைமையில் செயலாளர் தயாளன்,துணைத் தலைவர் தீனதயாளன்,துணைச் செயலாளர் திருவேங்கடம்,பொருளாளர் துரை.கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.


No comments

Thank you for your comments