பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதை ஆணையர் ஹர் சகாய் மீனா நேரில் ஆய்வு
காஞ்சிபுரம் :
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடிடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களான பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை எளிதான முறையில் வழங்கும் வகையில் 7ம்தேதி முதல் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 10ம்தேதி முதல் 13ம்தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.
அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமுமின்றி ரூ.1,000 ரொக்கத்தொகையுடன் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 48- வது வார்டு டெம்பிள் சிட்டி பகுதியில் உள்ள முன்மாதிரியான நியாய விலை கடைகளில் உணவுப் பொருள் வளங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் ஹர் சகாய் மீனா அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய உணவுப் பொருள்கள் தரத்தான் கொடுத்தும் பொங்கல் பரிசாக வழங்கக்கூடிய ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ அரிசி சக்கரை மற்றும் முழு செங்கரும்பு முறையாக வழங்கப்படுகிறதா என கடையின் அதிகாரிகளிடமும் பொது மக்களிடம் கேட்டறிந்தார். ஆய்வு செய்த பின் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுயும் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், வருவாய் அலுவலர் வெங்கடேஷ் , கூட்டுறவு இணை பதிவாளர்ஜெயஸ்ரீ,ண 48-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் கார்த்திக் உணவு பொருள் வழங்கல் அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதன்பின் காஞ்சிபுரம் மாநகராட்சி மற்றும் மாவட்ட பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு தங்கு தடையின்றி வழங்ககிறதா என தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.

.jpg)

No comments
Thank you for your comments