Breaking News

உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் 108 கோ பூஜை

காஞ்சிபுரம், ஜன.17:

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் 108 கோ.பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

படவிளக்கம் : உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் நடைபெற்ற 108 கோ பூஜை

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில் அமைந்துள்ளது.ஆண்டு தோறும் இக்கோயிலில் பொங்கல் திருநாளையொட்டி 108 கோ.பூஜை நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

நிகழாண்டு பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக உலக நன்மை கருதி மூலவர் நட்சத்திர விருட்ச விநாயகர்,சுப்பிரமணியர் மற்றும் 27 நட்சத்திர அதி தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து தீபாராதனைகளும் நடைபெற்றன.

இதனையடுத்து கோயில் உற்சவர்களான விநாயகர் மூஷிக வாகனத்திலும்,ருத்ராட்ச லிங்கேசுவரர் ரிஷப வாகனத்திலும் வள்ளி,தெய்வானை சமேத சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும் அலங்காரமாகி கோ.பூஜை நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்ந்ததும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

பின்னர் 108 பசுக்களுக்கும் சிறப்பு அர்ச்சனையும் கோ.பூஜை தீபாராதனைகளும் நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் திருக்கல்யாணமும் நடைபெற்றது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


No comments

Thank you for your comments