காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உண்ணாவிரதம்
காஞ்சிபுரம், ஜன.5:
காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுற வங்கியின் தலைமை அலுவலகம் முன்பாக கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சங்க தலைவர் ஹரிஹரன் தலைமை வகித்தார்.
சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பி.கணேசன்,இணைப் பொதுச் செயலாளர் மகேந்திர குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த 35 மாதங்களாக தாமதமாகி வரும் ஊதிய உயர்வுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், அனைத்து கூட்டுறவு வங்கிகளையும் இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கப்பட வேண்டும்,கூட்டுறவு வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் 20 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி சங்க பொதுச் செயலாளர் கே.பி.ரமணன்,பொருளாளர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பேசினார்கள். சங்க நிர்வாகிகள்,உறுப்பினர்கள் பலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

No comments
Thank you for your comments