காஞ்சிபுரம் இடைத்தரகர் கொலை வழக்கில் 4 பேர் கைது
காஞ்சிபுரம், ஜன.9:
காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகராக பணிபுரிந்து வந்த ஆனந்தனை கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை 4 பேரை கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகராக செயல்பட்டு வந்தவர் ஜே.ஆனந்தன்(31) இவர் சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் பூட்டியிருந்த உணவகம் ஒன்றில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
அப்பகுதி பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸôர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஆனந்தனின் நண்பர்களை தேடிய போது அவர்கள் தலைமறைவாகி இருந்தது தெரிய வந்தது.இதனையடுத்து அவர்களை தீவிரமாக தேடி 4 பேரை கைது செய்தனர்.
பெரியகாஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவைச் சேர்ந்த அப்பு என்ற குணரஞ்சன்(29)ஓரிக்கை விவேகானந்தன் தெருவைச் சேர்ந்த கௌதம்(35)செம்பரம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பரத் என்ற கொத்தலை(23) காஞ்சிபுரம் அருகே கூரம் கிராமம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பிரபு தேவா என்ற கூரம் பிரபு(32) ஆகிய 4 பேரை காஞ்சிபுரம் தாலுகா போலீஸா கைது செய்துள்ளனர்.
தொழில் போட்டி காரணமாக கொலை செய்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments
Thank you for your comments